சுடச் சுடச் செய்திகள்

சிட்னிக்கு அவசரமாகத் திரும்பிய விமானம்

சிட்னி: சிட்னியிலிருந்து சீனாவின் ஷங்காய் நகருக்குப் புறப்பட்ட சீனாவுக்குச் சொந்த மான ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று அவசரமாக சிட்னிக்குத் திரும்பி யது. MU736 விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற ஒரு மணி நேரத்தில் சிட்னி விமான நிலையத்திற்குத் திரும்பியது. சிட்னி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளி யேற்றப்பட்டனர்.

அந்த விமானத் தின் என்ஜினில் பெரிய ஓட்டை ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். ஏ330 ஏர்பஸ் வகையைச் சேர்ந்த இந்த விமானத்தில் 265 பயணிகள் இருந்தனர். பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து ஏதோ தீப்பற்றி எரிவது போன்ற வாசனை வந்ததாகவும் அந்த விமானத்தில் சென்ற பயணிகள் சிட்னி விமான நிலையம் திரும்பியதும் கூறினர். விமானம் புறப்பட்டபோது அந்த இயந்திரம் நன்றாகத்தான் இருந்தது என்று விமானி கூறியுள்ளார். விமானம் ஓடு தளத்தில் சென்றபோது ஏதாவது ஒரு பொருள் விமானத்தின் எந்திரப் பகுதியில் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon