சுடச் சுடச் செய்திகள்

மராவி நகரில் குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம்

மணிலா: பிலிப்பீன்சில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட வேளையில் தென்பகுதி மராவி நகரில் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம். மராவி நகரில் போராளிகளு டன் சண்டையிட்டு வரும் ராணுவ வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் ஆகியோர் தேசிய கீதத்தைப் பாடியும் பிலிப்பீன்ஸ் உயர் அதிகாரிகள் ஆற்றிய உரைகளை கேட்டபடியும் சுதந்திரதினத்தைக் கொண் டாடினர். அவர்கள் விமானத்தில் இருந்தபடியே போராளிகள் பதுங்கியிருக்கக்கூடிய பகுதி களில் குண்டுகளை வீசித் தாக்கினர். “நமது முஸ்லிம் சகோதரர் களுக்கு நாம் என்ன சொல்ல விரும்புகிறோம் என்றால் நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ப தால் அர்த்தமற்ற சண்டையை நிறுத்துங்கள் என்பதாகும்,” என்று மாநில துணை ஆளுநர் மேமின்டல் அடியோங் மக்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் கேட்டுக் கொண்டார்.

மணிலாவில் சுதந்திரதின உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஆலன் பீட்டர், மிண்டானோ தீவில் குறைந்தது இரு நகரங்களைக் கைப்பற்ற போராளிகள் திட்டமிட்டிருந்த தாகவும் ஆனால் அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மராவி தலைநகரில் நடந்த சுதந்திரதின கொடியேற்ற நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் பற்றுறுதி எடுத்துக் கொண்டனர். அந்நகரில் நீடிக்கும் சண்டையில் பலர் கொல்லப்பட்டதால் இந்த ஆண்டு கொடியேற்ற நிகழ்ச்சி, இறந்தவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் சோகத்துடன் கொண்டாடப்பட்டது. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon