விவசாயிகள் நிலை: நடிகர் விஜய் கவலை

சென்னை: நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் விவசாயிகளின் நிலை இன்று நன்றாக இல்லை என நடிகர் விஜய் கூறியுள்ளார். எந்தவொரு பலனுமே கிடைக்காமல் போராடும் விவசாயிகளை நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். “மனிதர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர்கள் விவசாயி கள். பசியை எளிதாகக் கடந்துவிடுவதால் தான் நாம் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை எனத் தோன்றுகிறது,” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். காசு கொடுத்தால் கூட சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது என்ற ஒரு நிலை வந்தால் மட்டுமே நாம் விவசாயிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த அவர், இந்தியா வல்லரசாக மாறு வதைவிட நல்லரசாக இருப் பதே முக்கியம் என்றும் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்