ஜெயகுமார்: இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை அவசியம்

சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைய வேண்டும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார். இரு அணிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே பொதுமக்கள், அதிமுகவினரின் விருப்பம்,” என்றார் ஜெயகுமார். “குழு ஏன் கலைக்கப்பட்டது என்பதை பன்னீர்செல்வம் தான் விளக்க வேண்டும். பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இரு அணிகளும் இணைய வேண்டும்,’’ என்றும் அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாகக் கூறினார்.