சுடச் சுடச் செய்திகள்

பெண்களுக்கான பாதுகாப்பு: நடிகை வரலட்சுமி கோரிக்கை

சென்னை: பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், தமிழகத்தில் மகளிர் நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

“பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொண்டேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்,” என்றார் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர் ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon