இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற போட்டி

சென்னை: இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவதில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அச்சின்னத்திற்கு உரிமை கோரும் சசிகலா அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 1.52 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நான்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. இதுவரை சசிகலா தரப்பில் நான்கு தவணைகளாக மொத்தம் 3.10 லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.