சுடச் சுடச் செய்திகள்

நீதிபதி கர்ணனை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக கைதாக நேரிடும் என்பதால் தலைமறைவான நீதிபதி கர்ணன், நேற்று ஓய்வுபெற் றார். தலைமறைவு நிலையிலேயே ஓய்வுபெறும் முதல் நீதிபதி என்ற நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதி பதியாக இருந்த கர்ணன், சக நீதிபதிகள் குறித்து சில புகார்களை எழுப்பினார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து காரசாரமாக சில கருத்துகளைத் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து அவதூறு வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. எனினும் வழக்கு விசாரணைக்கு நீதிபதி கர்ணன் ஒத்துழைக்கவில்லை.

எனவே அவரைக் கைது செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த கர்ணன், திடீரென தலைமறைவானார். கைது நடவடிக் கையில் இருந்து தப்பிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய் தது. இந்நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு 62 வயது பூர்த் தியானது. இதையடுத்து அவரது பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இன்னமும் தலைமறைவாகவே உள்ள கர்ணன், பணி ஓய்வு விழா, பிரிவு உபசார விழா ஆகியவை நடைபெறாமலேயே ஓய்வுபெற்றுவிட்டார்.