காற்பந்து: ஸ்பெயின் வென்ற போதிலும் அணிக்கு அதிர்ச்சி

ஸ்பெயினுக்கும் மேசிடோனியா- வுக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று காற்- பந்துப்போட்டி ஒன்றில் ஸ்பெயின் மேசிடோனி யாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. டேவிட் சில்வா, டியாகோ கோஸ்ட்டா ஆகிய இரு ஆட்டக்- காரர்கள் ஆட்டத்தின் முதல் பாதியில் போட்ட கோல்கள் ஸ்பெயினுக்கு முன்னிலை அளித்த போதிலும் மேசிடோனி- யாவின் ஸ்டெஃபன் ரிஸ்ட்டோவ்- ஸ்கி ஆட்டத்தின் 66வது நிமி- டத்தில் போட்ட கோல் ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதையடுத்து மேசிடோனியா அணி ஆட்டக்காரர்கள் இன் னொரு கோலுக்காக கடுமையாக முனைந்தபோதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் ‘ஜி’ பிரிவில் முன்னிலை வகிக்கிறது. கோல் வித்தியாசத்தில் இத்தாலி இரண்டாவது நிலையில் உள்ளது. அடுத்து நடைபெற விருக்கும் தகுதிச் சுற்றுப் போட்டி யில் ஸ்பெயின் இத்தாலியை எதிர் கொள்ளும். மூன்று புள்ளிகளுடன் பிரிவில் இரண்டாவது கடைசி நிலையில் உள்ள மேசிடோனியா, மூன்றாவது நிலையில் உள்ள இஸ்ரேலை எதிர்கொள்ளும்.