பிரெஞ்சு பொது விருதைத் தட்டிச்சென்ற ரஃபேல் நடால்

பாரிஸ்: ஸ்பானிய டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், 10வது முறையாக பிரெஞ்சு பொது விருதைத் தட்டிச் சென்று வரலாறு படைத்துள்ளார். பாரிசில் நேற்று முன்தினம் நடந்த இறுதிச்சுற்றில் 6-2, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சுவிஸ் விளை- யாட்டாளர் ஸ்டான் வார்ரிங்- காவை அவர் வீழ்த்தினார். டென்னிஸ் பொது விருதுப் போட்டிகளில் விளையாட்டாளர் ஒருவர் 10 முறை ஃபிரெஞ்சு பொது விருதை வெல்வது இதுவே முதன்முறை. பாரிசில் தமது 22வது கிராண்ட் ஸ்லாம் இறுதிச் சுற்றில் விளையாடிய அவர், மூன் றாவது முறையாக நேர் செட் களில் வெற்றிப் பெற்றார். மொத்தம் 35 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியுற்றுள்ள நடால், இறுதிச் சுற்றுகளில் இது- வரை ஆறு ஆட்டங்களில் மட்டு மே தோல் வியடைந் துள்ளார். “10வது முறையாக பிரெஞ்சு பொது விருதை வென்றது மிகவும் சிறந்த, உணர்வுபூர்வத் தருணம். என்னால் இதை நம்ப முடிய வில்லை; வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை,” என்றார் 31 வயது நடால். கடைசியாக அவர் 2014ல் பிரெஞ்சு பொதுவிருதுப் போட்டியில் விருதைக் கைப்பற்றினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி