சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் - அர்ஜெண்டினா ஆட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைகள்

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சிங்கப்பூருக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையே இன்றிரவு நடைபெற- வுள்ள நட்புமுறை ஆட்டத்தை முன்னிட்டு, ஆட்டம் தொடங்கு- வதற்கு குறைந்தது ஒரு மணி- நேரத்திற்கு முன்னதாக ரசிகர்- கள் அனைவரும் தேசிய விளை- யாட் டரங்கிற்கு வந்துவிடுமாறு சிங்கப்பூர் விளையாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. கூடுதலான பாதுகாப்பு ஊழியர்களைப் பணியில் அமர்த்தி யுள்ளது விளையாட்டு மையம். அரங்கின் கதவுகள் மாலை 6.30 மணிக்குத் திறக்கப்படும். இன்றிரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள ஆட்டத்தைக் காண 20,000க்கும் அதிகமா னோர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு பரிசோதனைகள் விரைவாகவும் சுமூகமாகவும் நடை பெறுவதற்கு உதவ தேவை யானவற்றை மட்டும் எடுத்து- வருமாறு விளையாட்டு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே, இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் லைனல் மெஸ்ஸி இடம்பெற போவதில்லை என்ற செய்தி பெரிய எதிர் பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர் களுக்கு ஏமாற்றத்தை அளித் துள்ளது. என்றாலும் ஏங்கல் டி மரியா போன்ற பிற பிரபல ஆட்டக் காரர்கள் இடம்பெற இருப்பது அவர்களுக்குச் சற்று ஆறுதல் தரும். ஃபுல்லர்ட்டன் ஹோட் டலில் தங்கியிருக்கும் அர்ஜண்- டின ஆட்டக்காரர் களை நேரில் காணும் அரிய வாய்ப்பைப் பெற ரசிகர்கள் ஏராளமானோர் மணிக்- கணக்கில் கால் கடுக்க காத் திருந்தனர். பொறுமையுடன் காத்திருந்த அவர்களுடன் சர்ஜியோ ரோமேரோ உட்பட ஆட்டக் காரர் கள் சிலர் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டனர்

அர்ஜெண்டினா ஆட்டக்காரர் ஏங்கல் டி மரியாவை கண்ட மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர் கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon