கோஹ்லி: டிவில்லியர்ஸ் விக்கெட்டே திருப்புமுனை

லண்டன்: தென்னாப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ், மில்லர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே ஆட்டத்தின் திருப்- புமுனையாக அமைந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியுள்ளார். ஐசிசி வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா = தென் னாப்- பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடை பெற்றது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதால் இரு அணி- களுக்கும் முக்கிய ஆட்ட மாக இருந்தது. இந்தியாவின் அபார பந்து- வீச்சு, களக்காப்பு ஆகியவற் றால் தென்னாப்பிரிக்கா 191 ஓட்டங்களில் சுருண்டது. இந்திய அணியின் புவனேஸ்வர் குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின், பாண்டியா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்- றினர். டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர், இம்ரான் தாகீர் ‘ரன்=- அவுட்’ செய்யப்பட்டனர். பின்னர் விளையாடிய இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்து வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ‌ஷிகர் தவான் 78 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 76 ஓட்டங்களும் எடுத்தனர்.