சுடச் சுடச் செய்திகள்

அதிபர் தேர்தல் வேட்பாளர்; ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி: தற்போதைய அதிபர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடை வதால் புதிய அதிபர் வேட்பாளரைத் தேர்வுசெய்யும் பணிகளை ஆளும் பாஜக முடுக்கிவிட்டுள்ளது. இதையொட்டி பாஜக தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் முயற்சி செய்து வரு கின்றன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அனைத்துக்கட்சி தலைவர் களைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், பாஜக தாங்கள் நிறுத்தும் வேட்பாளர் போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது.

இதனால் மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார். அக்குழுவில் மத்திய அமைச் சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு மற்ற கட்சிகளிடம் அதிபர் வேட்பாளர் தேர்வு குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தும் என பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon