நடுங்கும் குளிரில் செயற்கை மழை

“ஊட்டியில் படப்பிடிப்பு என்றால் லூட்டிக்குப் பஞ்சம் இருக்காது என்பது கோடம்பாக்கத்தில் ரொம்ப பிரபலமான வாசகம். ஏனென்றால் ஊட் டிக்கு அப்படிப்பட்ட ராசி உண்டு. ஆனால், இம்முறை உற்சாக லூட்டிக்குப் பதிலாகப் பல சங்கடங்களை அனுபவித்து திரும்பியுள்ளனர் ‘உரு’ படக்குழுவினர். அதிலும் சில காட்சிகளைப் படமாக்க உயிரையே பணயம் வைத்து பட நாயகன் கலையரசனும் தன்‌ஷிகாவும் நடித்துள்ளனர்.

இதற்காக எல்லோருக்குமே நன்றி தெரிவித் துள்ளார் படத்தின் இயக்குநர் விக்கி ஆனந்த். “எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் எல்லோ ரையும் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன்”,” என்றும் படக்குழுவினரிடம் கூறியுள்ளார். முக்கியமாக சாய் தன்‌ஷிகாவிடம் ரொம்பவே நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்து, மன்னிப்பும் கோரினாராம் விக்கி.

“இது திகில் கலந்த, குற்றம் தொடர்பான கதை. பற்கள் தந்தியடிக்கும் சூழலில்தான் ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. கலையரசனும், தன்‌ஷிகாவும் மழையில் நனைந்தபடியே நடந்து செல்லும் காட்சி அது. “டிசம்பர் மாத குளிரில் எல்லோரும் விறைத்துப் போய்விட்டோம். இதில் குளிர் போதாத குறைக்கு தண்ணீர் லாரியைக் கொண்டு வந்து நிறுத்தி, மழை வருவது போல் ஏற்பாடு செய்துவிட்டார் இயக்குநர்,” என்கிறார்கள் படக்குழுவினர். அங்குதான் குலை நடுங்கிப் போயிருக்கிறார்கள் அத்தனை பேரும். கலையரசன்கூட இலேசாகத் தயங்க, தன்‌ஷிகாவோ, “எதுவாக இருந்தாலும் நான் தயார்,” என்று களமிறங்கிவிட்டாராம். அதன் பிறகுதான் படக்குழுவி னரும் தயக்கத்தை உதறிவிட்டு, களமிறங்கி உள்ளனர்.

இதனால்தான் அவ ருக்கு மட்டும் கூடுதல் நன்றி, பாராட்டு. “என்னைப் பொறுத்த வரையில் நான் நடிக்கும் படங்கள் எல்லாமே தடைகள் இன்றி நல்ல விதமாக வெளியீடு காணவேண்டும். அதனால் முடிந்த ஒத்துழைப்பை தந்தேன். அது என் கடமை,” என்கிறார் சாய் தன்‌ஷிகா.