பிரபாகரன்: உணர்வுபூர்வமான படம் எனப் பாராட்டுகிறார்கள்

‘சத்ரியன்’ படம் வசூல் ரீதியில் பெரிய வெற்றியை ஈட்டும் என்று உறுதியாகச் சொல்கிறார் அதன் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் திரைக்கு வந்துள்ளது ‘சத்ரியன்’. விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான நடிப்பு, அதிரடிக் காட்சிகள் அமைந்திருப்பதால் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூலும் திருப்திகரமாக இருப்பதாகத் தகவல். இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் பிரபா கரன். மீண்டும் ஒரு வெற்றியை அளித்து, தன்னைத் தங்கள் குடும் பத்தில் ஒருவன்தான் என்பதை தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அழுத்தமாகச் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார். “நான் ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானபோது தென் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடே என்னை நல்ல இயக்குநராக அங்கீகரித்து அடையாளம் தந்தது. ‘சத்ரியன்’ படத்துக்கும் அதே ஆதரவு தந்ததற்கு நன்றிகள் பல.

‘சத்ரியன்’ படத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன்