கனடா எஃப்1: லுவிஸ் ஹேமில்டன் முதலிடம்

மாண்டிரியல்: கனடா எஃப்1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியின் லுவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் பந்தயம் மாண்டிரியல் பந்தயத் தடத்தில் நடைபெற்றது. பந்தய தூரமான 305.27 கிலோ மீட்டர் தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். இதில் ஹேமில்டன் பந்தய தூரத்தை 1 மணி 33 நிமிடங்கள் 05.154 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். முதலிடம் பிடித்த அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. ஒட்டுமொத்தத்தில் ஹேமில்டன் பெற்ற 56வது வெற்றி இதுவாகும். கனடா எஃப்1 பந்தயத்தில் அவர் பெற்ற ஆறாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபின்லாந்து வீரர் வால்ட்டெரி பாட்டஸ் (மெர்சிடிஸ் அணி) 19.783 வினாடிகள் கழித்து பந்தயத்தை முடித்து இரண்டாவது இடத்தைப் பெற்றார். ரெட்புல் அணியின் டேனியல் ரிச்சர்டோ மூன்றாவது இடத் தைப் பிடித்தார். நான்கு முறை வெற்றியாளரான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (ஃபெராரீ அணி) நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஏழு சுற்றுகள் முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 149 புள்ளிகளுடன் முதலிடத்திலும் லுவிஸ் ஹேமில்டன் 129 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறந்த குழுக்களோடு போட்டியிடுவது சிட்டிக்குக் கடினமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்,” என்று அக்குழுவின் நிர்வாகி கார்டியோலா. படம்: ஏஎப்பி

10 Dec 2019

கார்டியோலா: சிட்டியால் போட்டி போட முடியாது
பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

10 Dec 2019

பில்லியர்ட்ஸ்: தொடர்ந்து 6வது முறையாக தங்கப்பதக்கம்

லெஸ்டர் சிட்டி குழுவிற்கான நான்காவது கோலைப் போட்டார் அதன் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி. படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

எதிர்பார்ப்பை அதிகரித்த லெஸ்டர் சிட்டி