உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஈரான்

டெஹ்ரான்: ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு ஆசியப் பிரிவிலிருந்து ஈரான் தகுதி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தப் போட்டிக்குத் தகுதி பெறும் முதல் ஆசியக் குழு எனும் பெருமை ஈரானைச் சேரும். பிரேசிலை அடுத்து ஈரான் உலகக் கிண்ணப் போட்டியில் தமது இடத்தை உறுதி செய்துள்ளது. நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற ஆட்டத்தில் உஸ்பெகிஸ் தானைச் சந்தித்த ஈரான் 2=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னேறியது. கொண்டாட்டத்தில் மூழ்கிய ஈரானிய வீரர்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி