சுடச் சுடச் செய்திகள்

‘நான் ஒரு திருடன்’ என பச்சை குத்திய அவலம்

சைக்கிள் ஒன்றைத் திருட முயற்சி செய்த இளையரைப் பிடித்த பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் அவரது நண்பருடன் சேர்ந்து அந்தச் சிறுவனின் நெற்றியில் ‘நான் ஒரு திருடன், தோற்றுப்போனவன்’ என்று போர்த்துக்கீசிய மொழியில் பச்சை குத்தியுள்ளார். பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் நடந்த இந்தச் சம்பவம் காணொளியாக இணை­யத்தில் பரபரப்பாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்தக் காணொளி­யைப் பகிர்ந்து கொண்ட பலரும் பச்சை குத்தும் கலைஞரைத் திட்டித் தீர்த்­துள்ளனர். பதினேழு வயது சிறுவனின் நெற்றியில் கொடூரமான முறை­யில் எழுதிய பச்சை குத்தும் கலைஞரான ரோனில்டோ மொரைய்ரோ டி யசயவ்ஜோ (29) அவருக்கு உதவி­யாக இருந்த அவரது அண்டை வீட்டுக்காரர் மேகோன் வெஸ்லி கார்வல்ஹோ டோஸ் ரீஸ் (27) ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. சிறுவனின் நெற்றியில் பச்சை குத்திய அந்த ஆடவர்கள் அதை காணொளியாகப் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்­றம் செய்துள்ளனர்.

இவர்களின் இந்தக் கொடூரச் செயலை துன்புறுத்தல் என காவல்துறை வகைப்படுத்தி­யுள்­ளது. அந்தச் சிறுவன் எங்கு வசிக்­கிறான் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அவனது நெற்றியில் பச்சை குத்திய பிறகு அவனை விட்டுவிட்டோம் எனவும் போலிஸ் விசாரணையில் அந்த ஆடவர்கள் தெரிவித்தனர். “சைக்கிளைத் தொட்டுப் பார்த்தேன், நான் அதைத் திருட வில்லை. நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறி யுள்ளான் அந்த அப்பாவிச் சிறு­வன். இந்நிலையில், பிரேசில் நாட்டின் செய்தி இணையத்தளம் ஒன்று, சிறுவனின் நெற்றி­யில் குத்தப்பட்ட பச்சையை அழிப்பதற்காக நிதி வசூலிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 20,000 பிரேசிலிய டாலர் (S$8,400) நிதி வசூல் ஆகியுள்­ளது.

சைக்கிள் திருட முயற்சி செய்ததாக 17 வயது சிறுவனின் நெற்றியில் “நான் ஒரு திருடன்” என்று பச்சை குத்திய பச்சை குத்தும் கலைஞன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon