சுடச் சுடச் செய்திகள்

சமூக பிணைப்புகளை வலுப்படுத்த வேண்டும்

சமுதாயம் ஒற்றுமையுடன் விளங்­கவும் சிங்கப்பூரர்கள் ஓர் அணி­யாகத் திரளவும் சிங்கப்பூரர்கள் தங்கள் இனத்­தைத் தாண்டி மற்ற இனத்­தவருடன் பிணைப்பு­களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதை நேற்று கூறிய உள்துறை சட்ட அமைச்சர் கா.சண்முகம் மேற்கூறியதை செயல்படுத்துவதில் சமூகத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று விளக்கினார். “மற்றவர்களுடன் தொடர்பு களை ஏற்படுத்திக்கொள்ள நாம் இனஎல்லை­களைத் தாண்டி மற்ற இனத்தவருடன் பழக வேண்டும். நாம் நல்ல முஸ்லிமாக, நல்ல இந்துவாக, நல்ல கிறிஸ்துவராக அல்லது இறை நம்பிக்கை இல்லாத­வராகவும் இருக்கலாம். அதே நேரத்தில் மற்றவருடன் கலந்துற வாடி நல்ல சிங்கப்­பூரர்களாக விளங்கலாம்.” சிங்கப்பூர் குடிநுழைவுச் சோத­னைச் சாவடி ஆணைய தலைமையகத்தில் உள்துறை குழுவின் பணித் திட்ட கருத்­தரங்கில் அமைச்சர் மேற்­கண்ட ­வாறு பேசினார். சிங்கப்பூரில் தலையாய பாதுகாப்பு மிரட்டலாக விளங்குவது பயங்கரவாதம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பயங்கரவாத சிந்தனைக்கு எதி­ராகக் கடுமை­யான நட­வடிக்கை எடுக்க முஸ்­லிம் சமூ­கம் முயற்சி செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரிலுள்ள இஸ்­லாமிய சமய ஆசிரியர் குழுவினர் கூறியுள்ளனர். தீவிரவாதச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, உலகெங்கி­லும் நடக்கும் பயங்கரவாதச் செயல்களைப் பாராட்டும் தனி­மனி­தர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்குமாறு அவர்கள் சமூ­கத்­திடம் வலியுறுத்தினர். இத்த­கையோர் வழிதவறிப் போய்விட்ட­தால் இவர்களுக்கு முறையான ஆலோசனை அளிக்கப்படவேண்­டும் என அவர்கள் கூறினர். முஸ்லிம் சமூகம் செயலில் இறங்கவேண்டும் என அழைப்பு விடுக்கும் அறிக்கையை ஏழு போதகர்கள் நேற்று வெளியிட்ட னர். அல்ஜுனிட் மதராஸாவின் முதல்­வர் மஹ்முத் மட்லப் சித்திக், முஜாஹிரின் பள்ளிவாச லின் நிர்வாகத் தலைவர் அப்துல் மனாஃப் ரஹ்மாட், மேவங்கி ஷரியா ஆலோசகர் கமால் மொக்­தார் ஆகியோர் அவர்களில் உள்ளடங்குவர். சிங்கப்பூரரான 22 வயது ஸாய்கா இஸ்ஸா சஹ்ரா அல் அன்சாரி, தீவிரவாதச் சிந்தனை­களை வளர்த்துக்கொண்டதற்­காக இம்மாதத் தொடக்கத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்­தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்­கப்பட்ட செய்தி வெளிவந்த­தைத் தொடர்ந்து சமய ஆசிரி­யர்கள் இந்த அழைப்பை விடுத்­தனர்.

நேற்றைய பணித்திட்ட கருத்தரங்கில் பயிற்சிகளைப் பார்வையிடும் அமைச்சர் கா.சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்