பங்ளாதேஷ் இளையர் கைது

சென்னை: துறைமுகப் பகுதி அருகே கடலில் நீந்திக் கொண்டிருந்த பங்ளாதேஷ் இளையர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அந்த இளையர் கடலில் நீந்திக்கொண்டிருப்பதை வடசென்னை மீனவர்கள் கண்டனர். இதையடுத்து அவரை மீட்டு படகில் கரைக்கு அழைத்து வந்தனர். உடலில் ஆடைகள் ஏதுமின்றி காணப்பட்ட அவர், பின்னர் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் பங்ளாதேஷை சேர்ந்த முகமது என்று தெரியவந்துள்ளது. அவர் துறைமுகத்தை நோட்டமிட வந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.