இந்தோனீசிய மாநிலங்களில் பரவியுள்ள தீவிரவாதம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதம் பரவியுள்ள தாக இந்தோனீசிய ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார். பிலிப்பீன்சின் தென்பகுதி நகரான மராவியில் போராளிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த மூன்று வார காலமாக சண்டை நீடிக்கும் வேளையில் இந்தோனீசிய ராணுவம் சுலாவேசி எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. “பாப்புவா தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஐஎஸ் பயங்கர வாத இயக்கத்தைச் சேர்ந்த ரகசிய குழுக்கள் உள்ளன,” என்று இந்தோனீசிய ராணுவத் தலைவர் ஜெனரல் கடோட் நுர்மாண்டியோ கூறினார். அக்குழுக்களின் உறுப்பினர் கள் தீவிரவாதப் போக்குடையவர் களாக உள்ளனர் என்றும் ஆனால் அவர்கள் செயலற்றவர்களாக இருப்பதாகவும் ராணுவத் தலைவர் கூறினார். இந்தோனீசியாவில் திங்கட்கிழமை இரவு நடந்த ஊடகத் துறை தலைவர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

செயலற்று இருக்கும் அந்த உறுப்பினர்கள் அவர்களின் தலைவரிடமிருந்து உத்தரவு வந்ததும் செயலில் இறங்கக்கூடும் என்று ராணுவம் எச்சரித்துள்ளது. பிலிப்பீன்சின் மராவி நகரி லிருந்து தப்பிக்கும் ஐஎஸ் போராளிகளில் எவரேனும் இந் தோனீசியாவுக்குள் நுழைய நேர்ந் தால் அவர்களுக்கு இந்தோனீ சிய மாநிலங்களில் உள்ள ஐஎஸ் உறுப்பினர்கள் தங்க இடமளிக்கக் கூடும் என்று இந்தோனீசியா கருதுகிறது. இதனால் பிலிப்பீன்சுடனான எல்லைப் பகுதியிலும் சுலாவேசி எல்லையிலும் இந்தோனீசிய ராணுவம் பாதுகாப்பை வலுப் படுத்தியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் கனிப் செய்தியாளர்களிடம் கூறினார்.