உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய மக்கள்

பாக்தாத்: ஈராக்கின் மோசுல் நகருக்கு அருகே உள்ள முகாமில் தங்கியுள்ளவர்களில் நூற்றுக்கணக்கானோர் உணவு நச்சுத்தன்மை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்றுவலியால் சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மூன்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.