டியுபி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்தும் தெரேசா மே

லண்டன்: பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைக்க உடன்பாடு காண்பது தொடர்பில் வட அயர்லாந்தின் டியுபி எனப்படும் ஜனநாயக ஐக்கிய கட்சித் தலைவருடன் தொடர்ந்து பேச்சு நடத்தும் முயற்சியில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே ஈடுபட்டுள்ளார். நடந்துமுடிந்த பிரிட்டிஷ் தேர்த லில் பெரும்பான்மை பெறத் தவறியதற்காக திருவாட்டி மே திங்கட்கிழமை கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும் உடன்பாடு காண் பதைப் பொறுத்தே அவர் பதவி யில் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.