ராகுல் காந்தி: மிரட்டல் ஆட்சி நடத்துகிறார் மோடி

பெங்களூர்: நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். சிறுபான்மை சமூகத்தினர் அச்சுறுத்தப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள், உயர் அதிகாரிகள் மிரட்டப் படுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பெங்களூரில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத் தரங்கில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். “எதுபற்றியும் பேசக்கூடாது. உண்மை வெளிவரக் கூடாது என்று நரேந்திர மோடி கருதுகிறார். இப்போது அதிகாரம் மூலம் உண்மையை வீழ்த்தப் பார்க்கிறார்கள். என்னிடம் பத்திரிகையாளர்கள் சிலர் பேசும்போது, நாங்கள் நினைத்ததை இப்போது எழுத முடியவில்லை. பத்திரிகை யாளர்களை மிரட்டுகிறார்கள். அதிகார வர்க்கத்தினர் மிரட்டப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

“உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு அவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. “எப்போது உண்மையை அமைதி ஆட்கொள்கிறதோ அப்போது அந்த அமைதி பொய்யாக மாறிவிடும் என்று ரஷ்யக் கவிஞர் ஒருவர் கூறி இருக்கிறார். “இப்போதைய மத்திய அரசு அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறது. யாரும் எதுவும் பேசக் கூடாது என்று மிரட்டல் ஆட்சி நடத்துகிறது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகாத்மா காந்தியைப் பற்றி விமர்சிக்கிறார். இதற்கு கூட யாரும் மாற்று கருத்து சொல்லக்கூடாது என்று நினைக்கிறார்கள்,” என்று ராகுல்காந்தி பேசினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon