சுடச் சுடச் செய்திகள்

பிரதமர்: உடன்பிறப்புகளின் அறிக்கை வருத்தமளிக்கிறது

தனிப்பட்ட குடும்ப விவகாரங்களை பொதுப்படையாக்கியுள்ள தமது உடன்பிறப்புகளின் அறிக்கை ஏமாற்றத்தையும் வருத்­தத்தையும் அளிப்பதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். “அவர்கள் தெரிவித்த புகார்­கள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. நானும் என் மனைவி ஹோ சின்னும் இந்தப் புகார்களை நிராகரிக்கிறோம்.  குறிப்பாக, என் மகனை அரசியலில் ஈடு படுத்துவதில் எனக்கு விருப்பம் இருப்­ப­தாகக் கூறுவது அபத்தமான புகார்,” என்று திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.
திரு லீ சியன் லூங் தமது  தம்பி­ திரு லீ சியன் யாங், தங்கை டாக்டர் லீ வெய் லிங்  இருவரும் இணைந்து வெளி யிட்ட ஆறு பக்க பொது அறிக் கைக்கு நேற்று பதில் அளித்தார்.
அந்த அறிக்கையில் தங்களது அண்ணன் மீது நம்பிக்கையிழந்து விட்டதாக இருவரும் கூறினர்.

“லீ குவான் இயூ வகுத்த பண்புநெறிகளுக்கு என்ன­வாயிற்று” என்ற தலைப்பிலான அந்த அறிக்கை எண் 38, ஆக்ஸ்லி சாலையில் உள்ள லீ குவான் இயூவின் வீட்டை இடிப் பது குறித்த சர்ச்சை பற்றியது. பிரதமர் லீ தமது பதில் அறிக் கையில், “உடன்பிறந்தவர்­கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை குடும்பத்­துக் குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்­­டவன் நான். 23ஆம் தேதி மார்ச் 2015ல் என் தந்தை இறந்தபின் அவரின் மூத்த மகனாக, எங்கள் பெற் றோருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, குடும்பப் பிரச்சினை களை என்னால்  இயன்ற வரை குடும்பத்­துக்குள்ளேயே தீர்க்க முயற்சி செய்து வருகிறேன்.

“எனது உடன்பிறப்புகளின் அறிக்கை எனது தந்தையின் நற்பெயரைப் பாதித்துள்ளது,” என்று திரு லீ கூறியுள்ளார். டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் இருவரும் ஃபேஸ்­புக்கில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வெளியிட்ட  அறிக்கையில், தங்களது நட­வடிக்­கைகள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக உணர் வ­தாக­வும் அரசாங்க அமைப்புகள் தங்களுக்கும் லீ சியன் யாங்கின் மனைவி லீ சுவெட் ஃபென்னுக் கும் எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்று அச்சம் கொண்டுள் ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
லீ சியன் யாங் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

லீ குவான் இயூவின் மறைவுக்குப் பின்னர் சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் லீ குவான் இயூவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவையாக இல்லை என்பது அவர்கள் முன்வைத் துள்ள புகார்களின் ஒன்று. மறைந்த திரு லீயின் சொத்துகளை பராமரிக்கும் காப்பாளர்களாக டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கையில், தமது மறைவுக்குப் பின் தமது வீடு இடிக்கப்பட வேண்டும் என்ற லீ குவான் இயூவின் விருப்­­பத்தை அவர்­கள் மறுஉறுதிப்படுத்தி­யுள் ளதுடன்  “வீட்டைப் பாதுகாப்பது தங்களது அரசியல்  ஆதாயத்தைப் பெருக்கும்” என்பதால் பிரதமர் லீயும் அவரது மனைவி ஹோ சிங்கும்  மறைந்த லீயின் விருப் பத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக் கின்றனர் எனவும் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon