பாலியல் பலாத்காரம்: தீர்ப்புக்கு உதவிய சிறுமியின் ஓவியம்

உறவினாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற வழக்கில் விசாரணை சிரமமாக இருந்த நிலையில், டெல்லி நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமி வரைந்த ஓவியங்களை வைத்து குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கோல்கத்தாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி குடும்ப சூழல் காரணமாக டெல்லியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எட்டு வயதாக இருந்த அந்தச் சிறுமியை அத்தையின் கணவய் அக்தர் அகமது பலமுறை பாலியல் பலாத் காரம் செய்துள்ளான். குற்றச்சாட்டின் தொடர்பில் அவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டான்.

இதுதொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அந்தச் சிறுமி தமது கட்சிக்காரர் மீது குற்றம் கூற போதிக்கப் பட்டுள்ளார் என்றும் அவர் சாட்சி சொல்லத் தகுதியற்றவர் என்றும் அகமதின் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், வழக்கின்போது சிறுமியிடம் தாளும் கிரையோனும் கொடுக்கப்பட்டபோது அவள் வரைந்த படம் தீர்ப்பில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அவள் வரைந்த அந்தப் படத்தில் ஓர் ஒதுக்கப்பட்ட வீடு, ஒரு சிறுமி பலூன்களைப் பிடித்திருக்கிறாள், அவளுக்கு அருகே ஓர் உடை கிடக்கிறது. அந்தப் படத்துக்கு மிகவும் சோக மான வண்ணங்களை அவள் தீட்டியிருந்தாள். சிறுமி அனுபவித்த துன்பத்தின் விளக்கமாக அந்தப் படத்தைப் பார்த்த நீதிபதி அதன் அடிப் படையில் குற்றவாளிக்கு தண்டனை அளித்தார்.