60 வயது நடிகர்களுக்கு 20 வயது நாயகியா?

வருத்தப்படுகிறார் ரீமா கல்லிங்கல் வயதான நடிகர்களுக்கு இருபது வயது இளம் நாயகியை ஜோடியாக நடிக்க வைப்பது திரையுலகில் வாடிக்கையாகிவிட்டதாக நடிகை ரீமா கல்லிங்கல் கூறியுள்ளார். அதிலும் 60 வயது நடிகருக்கு இளம் நடிகைகளை ஜோடியாக்குவது எந்த வகையில் சரி? என்பது அவரது கேள்வியாக உள்ளது. “ஒரு 20 வயது நடிகையை 60 வயது நாயகனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறார்கள். அதே சமயத்தில் 50 வயது நடிகையை 60 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கச் சொல்கிறார்கள். “நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளம், புகழ், மரியாதை ஆகியவை நடிகைகளுக்கு மிகக்குறைவாகவே கிடைக்கிறது. மலையாளம் மட்டும் அல்ல, மற்ற மொழி திரை உலகிலும் 60 வயது நடிகர்களுக்கு 20 வயது நடிகைகளைத்தான் ஜோடியாக்குகிறார்கள். “சில நடிகர்கள் தங்கள் மகளை விட குறைந்த வயதுடைய பெண்களுடன் ஜோடியாக நடிக்கிறார்கள்,” என்று ஆதங்கப்படுகிறார் ரீமா.