சுடச் சுடச் செய்திகள்

காதல் திருமணத்தில் கவுதம் கார்த்திக் உறுதி

‘ரங்கூன்’ படத்தின் வெற்றி அதன் நாயகன் கவுதம் கார்த்திக்கை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தான் என்கிறார். இயக்குநர் என்பதைவிட ராஜ்குமார் தனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் எனவும் அழுத்தமாகச் சொல்கிறார். ‘ரங்கூன்’ விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது. இது அப்படக் குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கவுதம் கார்த்திக் நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அப்படம் தொடர்பான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மனிதர் உற்சாக மிகுதியில் இருந்ததால் செய்தியாளர்களும் சரமாரியாகக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, தனக்கே உரிய அழகான சிரிப்புடன் அனைத்தையும் எதிர்கொண்டு பதிலளித்தார் கவுதம். மற்ற கேள்விகளை விட காதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்தச் சந்திப்பின்போது இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தினார் கவுதம் என்பதுதான் முக்கியம்.

ஒன்று, காதல் திருமணம்தான் புரிவாராம். மற்றொன்று முப்பது வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லையாம். “கண்டிப்பாக எனக்கு காதல் திருமணம் தான் நடக்கும். அதேசமயம், 35 முதல் 40 வயதில் தான் திருமணம் செய்யவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். தற்போது அப்பா, மற்றும் தாத்தா நடித்த படங்களைப் பார்த்து வருகிறேன். “என்னைப் பொறுத்தவரை அப்பா மிகப்பெரிய திறமைசாலி, அற்புதமான கலைஞர். அவர் நடித்ததில் எனக்கு ‘கோகுலத்தில் ஒரு சீதை’ திரைப்படத்தில் வரும் ‘கிரெடிட் கார்ட்’ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும். “சினிமாவில் அப்பாவுக்கு மிகச் சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம், ரேவதி மேடம் என்று சொல்வேன். சினிமாவில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்றால் அது ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ‘ரங்கூன்’ படத்தில் நடித்த டேனியல் ஆகியோர்.

“பொதுவாக நான் நடிக்கும் படங்களின் கதை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் கலந்து பேசுவேன். அப்பா நான் நடித்த ‘கடல்’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களைப் பார்த்துள்ளார். “இப்போது படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அப்பாவைப் பற்றிச் சொல்லும் போதுதான் அவரைப் பற்றிய பல நல்ல விஷயங்கள் எனக்குத் தெரியவருகிறது. அப்பா என்னை தம்பி என்றுதான் கூப்பிடுவார். வருங்காலத்தில் நான் நடிக்கும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவேன்,” என்றார் கவுதம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon