சுடச் சுடச் செய்திகள்

வடகொரியாவின் இணையத் தாக்குதல்கள் பற்றி அமெரிக்கா

வா‌ஷிங்டன்: வடகொரிய அர சாங்கம் இணையத் தாக்குதல் களைக் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருவ தாகவும் அதுபோன்ற தாக்குதல் களை இனியும் அந்த அரசாங்கம் நடத்தக்கூடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க உள்துறை அமைச் சும் மத்திய புலனாய்வு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக் கையில் வடகொரிய அரசாங்கத் தின் இணையத் தாக்குதல்காரர்கள் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள், வான்வெளி, நிதித் துறைகள், முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் போன் றவற்றை குறிவைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் தொடர் ஏவு கணைச் சோதனைகளால் அமெரிக் காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் பதற்றம் நிலவிவரும் வேளையில் இணையத் தாக்குதல் களைப் பற்றிய புதிய விவரங்கள் அந்தப் பதற்றத்தை அதிகரித் துள்ளன. இருப்பினும் எந்தவொரு நாட் டுக்கு எதிராகயும் தான் இணையத் தாக்குதல் தொடுக்கவில்லை என்று எப்போதும்போல இப்போதும் வடகொரியா மறுத்துள்ளது. இதற்கிடையே, வடகொரியா வுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகள் மீது பொருளியல் தடை களை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகளை விதிக்கலாமா என்பது குறித்து கூடிய விரைவில் வெள்ளை மாளிகை முடிவெடுக்கும் என்றார் அவர். வடகொரியா நிகழ்த்தி வரும் அணுவாயுத, ஏவுகணைச் சோதனை களைத் தொடர்ந்து அந்நாட்டுக் கான நெருக்கடிகளை உலக நாடு கள் அதிகரிக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு வருகிறது. அமெரிக்காவைச் சென்றடையும் ஆற்றல்கொண்ட ஏவுகணைத் தயாரிப்பில் வடகொரியா மும்முர மாக ஈடுபட்டு வருவதாக நம்பப் படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon