சுடச் சுடச் செய்திகள்

அனைவரும் ஒன்றுபட தெரேசா மே அழைப்பு

லண்டன்: கடந்த வாரத்தின் பொதுத் தேர்தலுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்ற நாயகராக ஜான் பெர்காவ் மீண்டும் ஒருமன தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “கடினமான சவால்களை எதிர்நோக்குவதால் நாட்டின் ஒற்றுமை கருதி நாம் அனை வரும் ஓரணியில் நிற்போம்,” என்று பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித் தார். கூட்டணி விவகாரம் இறுதி செய்யப்பட்ட பின்னர் மரபுப்படி அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் வெளியிடப்பட வேண்டும். அப்போது எலிசபெத் ராணியார் என்ன பேசுகிறார் என்பதைத் தாம் செவிமடுக்கத் தயாராக இருப்பதாக எதிர்த் தரப்பு தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்தார். உடன்பாடு எட்டப்படாமல் போனால் வலுவான, நிலையான தலைமைத்துவத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

லண்டன் வந்த பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோனுடன் பிரதமர் தெரேசா மே. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon