300 ஐஎஸ் போராளிகள் பள்ளிக்கூடத்தில் புகுந்தனர்

மத்திய கிழக்கில் தளம் கொண்டு செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர் புடைய போராளிகள் பிலிப்பீன்சின் தென் பகுதியில் நேற்று அதிகாலை திடீரென்று ஓர் ஊரில் புகுந்தனர். வடக்கு கொட்டபாட்டோ என்ற மாவட்டத் தில் இருக்கும் பிக்காவாயன் என்ற நகருக்கு அருகே உள்ள மலகாவிட் என்ற ஊருக்குள் சுமார் 300 துப்பாக்கிக்காரர்கள் அதிகாலை நேரத்தில் புகுந்து அங்கிருந்த ஒரு சிறிய ராணுவக் கூடாரத்தைத் தாக்கி பிறகு ஒரு பள்ளிக்கூடத்தைப் பிடித்துக்கொண்டனர். ஆனால் அந்த எதிரிகள் பின்வாங்கி விட்டதாகவும் பள்ளிக்கூடம் பாதுகாப்பாக இருப்பதாகவும் நேற்று பகல் நேரத்தில் பிலிப்பீன்ஸ் ராணுவ பேச்சாளரான பிரிகேடி யர் ஜெனரல் படில்லா தெரிவித்தார்.

போராளிகளின் இந்தத் தாக்குதல் சந்தர்ப்பவாதத் தாக்குதல் என்று அதிகாரிகள் வர்ணித்தனர். துப்பாக்கிக்காரர்கள் கைவரி சையைக் காட்டிய கிராமம் மராவி என்ற நகரிலிருந்து 190 கி.மீ. தெற்கில் இருக்கிறது. இந்த நகரில் கடந்த ஐந்து நாட்களாக வேறொரு பயங்கரவாதக் குழுவினரை எதிர்த்து அரசாங்கத் துருப்புகள் போராடி வருகின்றன. மலகாவிட் கிராமத்தில் புகுந்து பள்ளிக்கூடத்தைக் கைப்பற்றிக்கொண்ட போராளிகள் அங்கிருந்து ஓடியபோது ஐந்து பேரைப் பிணையாகப் பிடித்துச்சென்று விட்டதாகவும் ஆனால் அந்த ஐவரில் பள்ளிக்கூட மாணவர்கள் யாரும் இல்லை என்றும் ராணுவப் பேச்சாளர் சொன்னார். தாங்கள் பிணையாகப் பிடித்த ஐந்து பேரை போராளிகள் விட்டுவிட்டார்களா என்பதைக் கண்டறிய முயற்சி நடப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.

பிலிப்பீன்ஸின் வடபகுதியில் உள்ள பிக்கா வாயன் பகுதியில் போராளிகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்க வாகனம் வருமா வராத என அச்சத்துடன் எதிர்பார்த்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உலக நிதி ஆளுமை, பொதுச் சேவைத்துறை ஆகியவற்றுக்கு ஆற்றிய பங்குக்காக உயரிய தலைமைத்துவ விருது பெற்றார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம். படம்: புளூம்பெர்க்

19 Oct 2019

மூத்த அமைச்சர் தர்மனுக்கு தலைமைத்துவ விருது

‘சிறப்பு தலைமைத்துவச் சேவை விருதை’ மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்திற்கு அனைத்துலக நிதிக் கழகம் வழங்கியது. படம்: புளூம்பெர்க்

18 Oct 2019

அனைத்துலகப் பொருளியலுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தலைமைத்துவ விருது