மராவியில் போராளிகளை சுற்றிவளைத்தது ராணுவம்

தென் பிலிப்பீன்ஸ் நகரான மராவியில் சண்டையிட்டு வரும் போராளிகளின் வேகம் குறைந்துவிட்டதாகவும் பாதுகாப்புப் படை யினர் அவர்களைச் சுற்றிவளைத்துள்ளதாக வும் பிலிப்பீன்ஸ் ராணுவம் நேற்று தெரிவித் தது. மராவியை மீட்டெடுக்கும் ஐந்து வாரச் சண்டை தீவிரமடைந்து உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

போராளிகள் தரப்பில் பின்னடைவு காணப்பட்டபோதிலும் தென்கிழக்காசிய வட்டாரத்தில் கால்பதிக்க முயலும் ஐஎஸ் குழுவுக்கு மராவி நகர் முற்றுகை ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தென்கிழக்காசிய நாடுகள் கவலைப்படுகின் றன. மே 23ஆம் தேதி முற்றுகையைத் தொடர்ந்து இந்தோனீசியா, மலேசியா, பிலிப் பீன்ஸ் ஆகியன ஒன்றிணைந்து போராளி கள் நடமாட்டத்தைக் கண்காணித்து முறி யடிக்கும் சுற்றுக்காவலை தொடங்கியுள்ளன.