சுடச் சுடச் செய்திகள்

இணையப் பிரசாரங்களை முறியடிக்க அதிக ஈடுபாடு

சமய தீவிரவாத சித்தாந்தை முறி யடிப்பதற்கு சமய அதிகாரிகள் தங்களது இணைய நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என முஸ் லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். இளம் மலாய் முஸ்லிம்களின் எண்ணத்தில் பதிந்துவிடாதவாறு தீவிரவாத சித்தாந்தங்களுக்கு எதி ரான இணைய முறியடிப்பு நடப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “அதனால்தான் இங்குள்ள சமய அதிகாரிகள் தங்களது இணைய ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும். “இளம் சமய போதகர்கள் ஏற் கெனவே இணையத்தில் உள்ள திட் டங்களைப் பயன்படுத்துகின்றனர். இளம் சிங்கப்பூரர்களை ஈர்க்கும் விதமாக அவற்றைப் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் அடுத்து நாம் செய்ய வேண்டியது,” என்றார் டாக்டர் யாக்கூப்.

தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு மாற்றான விளக்கங்களை நாம் இணையத்தில் பிரபலப்படுத்த வேண் டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இளம் சமய போதகர்களும் இது தொடர்பாக சமய வகுப்புகளில் சக ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். “அவர்கள் முக்காடு அணிந்து வருவார்களா அல்லது அணியாமல் வருவார்களா என்பது முக்கியமல்ல. அவர்களைத் தொடர்புகொண்டு அமைதிப்படுத்த விரும்புகிறோம்,” என்று டாக்டர் யாக்கூப் கூறினார். நோன்புப் பொருநாளைக் கருப் பொருளாகக் கொண்டு அலங்கரிக் கப்பட்ட எம்ஆர்டி ரயிலை யூனோஸ் எம்ஆர்டி நிலையத்தில் நேற்றுக் காலை தொடங்கி வைத்த அமைச்சர் யாக்கூப், பின்னர் செய்தியாளர்களி டம் பேசினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon