மோசடிக் குற்றங்கள் அதிகரிப்பு

இவ்வாண்டு 110க்கும் அதிகமான வர்த்தகம் தொடர்பான ஆள்மாறாட்டப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத் துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 20% அதிகம். இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை சுமார் $13 மி. வெளிநாட்டில் இருக்கும் வர்த்தகத் தொடர்புகளுக்காக வெளிநாட்டு வங்கிகளுக்குப் பணம் அனுப்புவதாக நினைத்துக் கொண்டு மோசடி வலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. கணினிப் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மோசடிகளைத் தவிர்க்கலாம் என போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.