புகழ்பெற்ற மொசுல் பள்ளிவாசல் தகர்ப்பு

மொசுல்: மொசுல் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி வாசலை ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதிகள் தகர்த்துவிட்டனர் என்று அமெரிக்காவும் ஈராக்கும் குற்றம் சாட்டியுள்ளன. அந்தப் பள்ளிவாசல்தான் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப் பின் சித்தாந்தங்களைப் பரப்பும் மையமாக விளங்கியது. அதே பள்ளிவாசலில்தான் இஸ்லாமிய நாடு என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிர வாதிகள் சுயமாக அறிவித்துக் கொண்டனர். ஆனால் பள்ளிவாசல் அழிக்கப் பட்டதற்கு அமெரிக்க போர் விமானங்களே காரணம் என்று ஐஎஸ் தமது செய்தி நிறுவனத் தின் மூலம் தெரிவித்துள்ளது. இதனை மறுத்த அமெரிக்க அதிகாரிகள்,

“ஐஎஸ்ஐஎஸ் கூறுவது 1,000 மடங்கு பொய்,” என்றனர். இதற்கிடையே ஈராக்கியப் பிரத மர் ஹைதர் அல்-அபாடி, “ஐஎஸ் ஐஎஸ்ஸின் பள்ளிவாசல் இடிக்கப் பட்ட செயல் அவர்களுடைய தோல்வியை அதிகாரபூர்வமாக அறிவிப்பதுபோல உள்ளது,” என்றார். ராணுவம் நெருங்கியதும் ஐஎஸ் பயங்கரவாதிகள் பள்ளி வாசலைத் தகர்த்துவிட்டனர் என்றும் ஈராக்கிய படை தளபதிகள் கூறினர். ஈராக்கின் இரண்டாவது பெரிய, பழமையான மொசுல் நகரை பயங்கரவாதிகளின் பிடியி லிருந்து விடுவிப்பதற்காக கூட் டணிப் படைகள் கடும் தாக்கு தலைத் தொடுத்தனர். சுமார் 800 ஆண்டுகள் பழமை யான மொசுல் நகர பள்ளிவாசலின் கோபுரத்தில் ஐஎஸ் அமைப்பின் கறுப்பு, வெள்ளை கொடி பல ஆண்டுகளாகப் பறந்துகொண் டிருந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்

07 Dec 2019

ஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை

சிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி

07 Dec 2019

‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

07 Dec 2019

பிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி