சுடச் சுடச் செய்திகள்

பிரசல்ஸ் சந்தேகப்பேர்வழி ‘தனிமையை விரும்பியவர்’

பிரசல்ஸ்: பெல்ஜியம் தலை நகர் பிரசல்ஸ் மத்திய ரயில் நிலையத்தில் வெடிபொருளை வெடிக்கச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரை பற்றிய சில விவரங்கள் வெளியாகியுள்ளன. மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 36 வயது சந்தேகப் பேர்வழி தனிமையை விரும்பி யதாகக் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆணிகளும் வெடிபொருள் போத்தல்களும் நிரம்பிய சிறிய கைப்பெட்டியை வெடிக்கச் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

பெல்ஜியம் பாதுகாப்புப் படையினர் அவர் ஊசாமா ஸரியோக் என்று அடையாளம் கண்டுபிடித்துள் ளனர். பிரசல்ஸின் ஏழைமையான வட்டாரத்தில் வசித்து வந்தாலும் ஸரியோக் பற்றி அவ்வட்டாரத்தில் இருந்தவர் களுக்கு தெரியவில்லை. பாரிஸ் நகரத் தாக்கு தலுக்குப்பிறகு மேற்கொண்ட தீவிர சோதனைகளிலும் அவர் சிக்கவில்லை. இதற்கிடையே சம்பவம் தொடர்பில் நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் நேற்று கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon