சுடச் சுடச் செய்திகள்

டிரம்ப் யோசனை: மெக்சிகோ எல்லையில் சூரியத் தகடு சுவர்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது ஆதர வாளர்களுக்கு புதிய யோசனை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மெக்சிகோ எல்லையில் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்ட சுவர் கட்டப் படும். இதன் மூலம் எல்லையில் சுவர் கட்டுவதற்கான செலவு களையும் ஈடுகட்ட முடியும் என்று அதிபர் டிரம்ப் நம்பு கிறார். ஐயோவா பொதுக் கூட்டத் தில் பேசிய திரு டிரம்ப், “ஆம், எல்லையில் சுவர் கட்டுவோம். இதனால் போதைப்பொருள் நாட்டுக்குள் நுழைவது தடுக்கப் படும்,” என்றார். “இதுவரை யாரும் கேள்வி படாத யோசனை ஒன்றைக் கூற விரும்புகிறேன். அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சூரிய வெப் பம் கடுமையாக உள்ளது. இதனால் சூரியத்தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலமே செலவுகள் ஈடு கட்ட முடியும்,” என்று அதிபர் டிரம்ப் சொன்னார்.

மேலும் பேசிய அவர், “சுவர் கட்டுவதற்காக மெக்சிகோ தர வேண்டிய தொகையும் குறையும். இது நல்லதுதானே?,” என்றார் அவர். அமெரிக்க எல்லையில் சுவர் கட்டுவதற்கான செலவை ஏற்க அண்டை நாடான மெக்சிகோ மறுத்துவருகிறது. இந்த நிலையில் அதிபர் டிரம்ப், சூரியத் தகடு சுவர் யோசனையை வெளியிட்டுள் ளார். “சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு உயரமாக சுவர் எழுப்புகிறோமோ அவ்வளவும் மதிப்புமிக்கது. என்னுடைய இந்த யோசனை சிறந்தது அல் லவா,” என்றும் அவர் கேட்டார். பல மாதங்களுக்கு முன்பு சுவர் கட்டுவதற்கான உத்தேச யோசனைகளை வெளியிடுமாறு டிரம்ப்பின் வெள்ளைமாளிகை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண் டனர். இதையடுத்து லாஸ் வேகாஸ் வர்த்தகரான டாம் கீளிசன், சூரியத் தகடுகள் பயன்படுத்தும் யோசனை ஒன்றை சமர்பித்திருந்தார்.

என்னுடைய யோசனை சிறந்த கற்பனை வளமல்லவா? என்று பார்வையாளர்களிடம் கூறிய அதிபர் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon