இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் களமிறங்குகிறது. இந்த ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகின்றன. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் சுருண்ட இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸைத் தோற்கடிக்கும் இலக்குடன் அங்கு சென்றுள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஐந்து ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியப் பந்தடிப்பாளர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக அதிரடி பந்தடிப்பாளரும் விக்கெட் காப்பாளருமான ரிஷப் பந்த் இடம் பெறுகிறார்.

இதனால் தவானுடன் தொடக்க வீரராக யார் விளை யாடுவார் என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ரகானே அல்லது ரிஷப் பந்த் தொடக்க வீரராகக் களம் இறங்கக்கூடும். மேலும் வேகப்பந்து வீரர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு குல்திப் யாதவ் சேர்க்கப் பட்டுள்ளார். பும்ரா இடத்தில் வேகப்பந்து வீரரான முகம்மது ஷமி அல்லது உமேஷ் யாதவ் இடம்பெறலாம். இந்திய அணி 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற மூன்று நாடுகள் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றது. இதனால் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணி உள்ளது. பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியதால் இந்திய அணி இந்தத் தொடரில் நெருக்கடியுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சமநிலை கண்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அரை இறுதியில் வியட்னாம் வீராங்கனையோடு போராடிய மாதுரி, 20. படங்கள்: ஊடகம்

09 Dec 2019

மலேசியாவின் மாதுரி கராத்தே போட்டியில் தங்கம்

வெற்றியைக் கொண்டாடும் சிங்கப்பூர் குழு. படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்

09 Dec 2019

பிலிப்பீன்சை அலறவிட்ட சிங்கப்பூர் குழு

சிவப்பு நிற சீருடையில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் டேனியல் ஜேம்ஸைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கும் சிட்டி யின் ஏஞ்சலினோ. இவரை டேனியல் ஜேம்ஸ் சர்வசாதாரண மாக பல முறை தாண்டிச் சென்றார். படம்: இபிஏ

09 Dec 2019

என்ன, ஏது என தெரியாது தவித்த மேன்சிட்டி