‘இமை’

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, உருவாகும் புதிய படம் ‘இமை’. காதல் கதையான இதில் சரிஷ் நாயகனாகவும் அட்சய பிரியா நாயகியாகவும் நடித்துள்ளனர். பழைய நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் அருண் திருமொழிவர்மன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். “இது ஒரு முரட்டுத்தனமான காதலை விவரிக்கும் படம். கரடுமுரடான குணம் கொண்ட இளைஞனுக்கும் பூவைப் போன்ற மென்மையான அப்பாவிப் பெண்ணுக்கும் மலரும் காதலை அலசப் போகிறோம்,” என்கிறார் இயக்குநர் விஜய் கே.மோகன். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’, ‘வேனல் மரம்’ ஆகிய இரு வெற்றிப் படங்களை அளித்தவர். அடுத்த மாத இறுதிக்குள் ‘இமை’ திரை காணும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.