பிரபுதேவா படத்தில் ரம்யா நம்பீசன்

கார்த்திக் சுப்புராஜ், பிரபுதேவா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் ரம்யா நம்பீசனும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அப்படக் குழு இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் ரம்யா நம்பீசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏற்கெனவே படமாக்கிவிட்டதாக கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவிலும் புதுவையிலும் இப்படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில் ரம்யா நம்பீசனைத் தொடர்புகொண்டு தன் படத்தில் இடம்பெறும் கௌரவ வேடம் ஒன்றில் நடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டாராம் கார்த்திக் சுப்புராஜ். சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் முக்கிய வேடம் என்பதால் ரம்யாவும் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கேள்வி. இதையடுத்து, கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், ஒரே மூச்சாக தன் காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டதாக தகவல். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.