சுடச் சுடச் செய்திகள்

விஜய் நடிக்கும் புதுப் படத்தின் தலைப்பு ‘மெர்சல்’

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது சென்னை வாழ் இளையர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று. இப்படத்தின் முதல் தோற்றப் படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் முறுக்கு மீசையுடன், பின்னணியில் காளை கள் சீறி வர ஒரு கிராமத்து இளையர் போல் காட்சி அளிக்கி றார் விஜய். மேலும், இதுவரை இளைய தளபதி என்ற அடை மொழியே அவருக்குப் பயன்படுத் தப்பட்டு வந்த நிலையில், ‘மெர்சல்’ முதல் தோற்றப்படத்தில் விஜய்யை, ‘தளபதி’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது அவரது ரசிகர்களைக் கூடுதலாக உற்சாக மடைய வைத்துள்ளது. அவரது பிறந்தநாளை ஒட்டி நேற்று முன்தினம் மாலை தலைப் பும் முதல் தோற்றப்படமும் வெளி யிடப்பட்டுள்ளன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல், சமந்தா, நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon