இரு பெட்டகங்களில் 400 கிலோ தங்கம், 2,000 கிலோ வெள்ளி

சென்னை: கடந்த மாத இறுதியில் தீ விபத்து காரணமாக முற்றிலு மாகச் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிபாடுக ளுக்கு இடையே இரண்டு பாது காப்புப் பெட்டகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுள் கோடிக்கணக்கான ரொக்கப் பணம், தங்க, வைர நகைகள் இருந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் திடீரென தீப்பற்றியது. இரண்டு நாட்கள் தொடர்ந்து எரிந்ததில் அக்கட்டடத்தில் இருந்த பொருட் கள் அனைத்துமே தீக்கிரையாகின. இதனால் நூறு கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அந்தக் கட்ட டத்தை இடிப்பது என தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கின. இடிக்கும் பணி நடந்தபோது அதில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் பலியானார். அதன்பிறகும் சில நாட்கள் நீடித்த இடிப்புப் பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இடிபாடுகளை அகற்றும் வேலை நடந்து வருகிறது. இந்நிலையில், குவியல் குவிய லாகக் காணப்படும் இடிபாடுக ளுக்கு மத்தியில் இரண்டு பாது காப்புப் பெட்டகங்களைப் போலிசார் கண்டெடுத்துள்ளனர். அவற்றுள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ தங்க நகைகள், 2,000 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்திருக்கலாம் எனப் போலிஸ் தரப்பு தெரிவித் துள்ளது. மேலும் பல கோடி ரூபாய் ரொக்கப் பணம், ரூ.20 கோடி மதிப்புள்ள வைரங்களும் இருந் திருக்கக் கூடும் என்று போலிசார் கூறுகின்றனர். அதேசமயம் பெட்டகங்களில் இருந்த நகைகள் அனைத்தும் தீயின் தாக்கத்தால் பெட்டகத்திற்குள்ளே உருகிப் போயிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்