மோடி குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

தேனி: நாம் தமிழர் கட்சி நிர்வாகியான ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை, பிரதமர் நரேந்திர மோடி குறித்து வாட்ஸ் அப்பில் தவறாக விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஜெகன் என்ற அந்த ஆட வர், நாம் தமிழர் கட்சியின் நகர நிர்வாகிகளில் ஒருவராவார். இவருக்கும், மார்க்கை யன் கோட்டையைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவருக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து வேறு பாடுகள் நிலவி வந்தன. பழனிக்குமார் பாஜகவின் மண்டலத் தலைவராவார். மத்திய அரசு குறித்தும், பாஜகவின் செயல்பாடு குறித்தும் இருவரும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு கருத்து ரீதியில் மோதிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் அண்மையில் பாஜக நிர்வாகிகள், பிரதமர் மோடி உள்ளிட்டோர் குறித்து அவதூறாக சில கருத்துக் களையும், காணொளிப் பதிவையும் வாட்ஸ் ஆஃப் பில் வெளியிட்டார் ஜெகன். இதனால் கடும் அதிருப்தியடைந்த பழனிக்குமார் உள்ளிட்ட உள்ளூர் பாஜகவினர், அந்தப் பதிவு குறித்த விவரங்களை போலிசாரின் கவனத்துக்கு புகார் மனு வழி கொண்டு செல்ல, ஜெகனை தேனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.