சுடச் சுடச் செய்திகள்

பாகிஸ்தானில் தாக்குதல்: 12 பேர் பலி, பலர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குவெட்டா நகரில் ஒரு சோதனை சாவடிக்கு அருகே போராளிகள் நடத்திய தாக்குதலில் போலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 15 பேர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு போராளி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர் களிடம் கூறினார். தாக்குதலில் காயமுற்ற அனைவரும் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஐந்து பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார். காயமுற்றவர்களில் ஒன்பது பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர் என்று மருத்துமனை அதிகாரிகள் கூறினர்.

தலைமை போலிஸ் அதிகாரியின் அலுவலகத்திற்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டி ருப்பதால் அந்த அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டிருக்கலாம் என்று போலிசார் கருதுகின்றனர். குவெட்டா நகரம் ஆப் கானிஸ்தான் எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது. பலுசிஸ்தான் மாநிலத் தலைநகரான குவெட்டா நகரை அடிக்கடி இத்தகைய தாக்குதல்கள் உலுக்கி வருகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon