சீன அதிபரின் ஹாங்காங் பயணம்

பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு ஜூலை 29ம் தேதி ஹாங்காங் செல்லவிருப்பதாக சீன ஊடகத் தகவல்கள் கூறின. அதிபரின் ஹாங்காங் பயணம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் அதிபர் ஜின்பிங்கின் ஹாங்காங் பயணம் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சவுத் சைனா நாளேடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு அதிபராக ஜின்பிங் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன் முறையாக ஹாங்காங் செல்லவுள்ளார். சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. அதனை முன்னிட்டு சீன அதிபர் அங்கு செல்லவுள்ளார்.