சுடச் சுடச் செய்திகள்

டெங்கி பாதிப்பு: முதல் இரு இடங்களில் கேரளா, தமிழகம்

டெங்கி பாதிப்பு: முதல் இரு இடங்களில் கேரளா, தமிழகம் தமிழகத்தில் வெயில் சுட்டெரித் தாலும் கொசுக்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டை ஒப்புநோக்க, இவ்வாண்டின் இதுவரையிலான காலகட்டத்தில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. கொசுக்களால் பரவும் நோய் களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டு இந்தியாவில் டெங்கியால் பாதிக் கப்பட்டோரில் 70 விழுக்காட்டினர் கேரளாவையும் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஆக அதிகமாக கேரளாவில் 4,735 டெங்கி பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 3,259 பாதிப்பு சம்பவங்கள் இரு உயிரிழப்புகள் என தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டில் டெங்கி காய்ச்சலால் தமிழகத்தில் ஐவர் உயிரிழந்தனர்; மேலும் 2,500 பேர் பாதிக்கப்பட்டனர். குடீநீர்ப் பிரச்சினையைச் சமா ளிப்பதற்காக சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங் களிலும் பெரிய அளவிலான கலன்களில் குடிநீரைச் சேமித்து வைப்பதும் மேற்கு மாவட்டங்களில் மழைநீர் தேங்கிக் கிடப்பதும்தான் கொசுக்களின் திடீர் பெருக்கத் திற்குக் காரணம் என்று அதிகாரி கள் கூறுகின்றனர்.

அத்துடன், இந்தப் புள்ளிவிவரம் முழுமையான நிலவரத்தைக் கூற வில்லை என்பது அவர்கள் கருத்து. டெங்கி பாதிப்பு இருப்பதாக அரசு மருத்துவமனைகளில் உறுதி செய் யப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் இது என்றும் அந்தக் காய்ச் சலுக்காக தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்றவர்களை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா என்பது உறுதி யாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon