டெங்கி காய்ச்சல்: ஒரே நாளில் 30,000 பேர் மருத்துவமனையில் அனுமதி

டெங்கி காய்ச்சலால் கேரளா மிரண்டுபோய் இருக்கிறது. இவ்வாண்டு மட்டும் இது வரை 118 பேரின் உயிரை டெங்கி பறித்திருக்கிறது. குறிப்பாக, தலைநகர் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் டெங்கி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் வருகை அதிகரிப்பதால் போதிய இட வசதி இல்லாமல் மருத்துவ மனைகள் திணறுகின்றன. இதனால், நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 29,969 பேர் டெங்கி காய்ச்சலுக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டனர். இதனால் டெங்கியை கட்டுப்படுத்துவதில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று டெங்கி பாதிப்பைக் கணக்கெடுத்து வருகின்றனர். 24 மணி நேரமும் பணிபுரிய அரசு மருத்துவர்கள் அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon