டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆப்கான், அயர்லாந்து தகுதி

லண்டன்: கிரிக்கெட் விளையாட் டில் இதுவரை ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த ஆப்கானிஸ்தானும் அயர் லாந்தும் இனி டெஸ்ட் போட்டி களிலும் விளையாட உள்ளன. அந்த இரு நாடுகளுக்கும் அனைத்துலக கிரிக்கெட் மன்றத் தின் (ஐசிசி) முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டதால் அவை டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஐசிசியின் இந்த முடிவை அவ்விரு நாடுகளும் வரவேற்றுள்ளன.

"ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாட்டிற்கு இது மிகப் பெரிய, குறிப்பிடத்தக்க சாதனை. டெஸ்ட் அந்தஸ்து பெற்றதால் நாடே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இது, நோன்புப் பெருநாளுக்கான மிகச் சரியான பரிசு," என்று நெகிழ்ச்சி யுடன் கூறினார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷஃபிக் ஸ்டானிக்ஸய். ஒருவழியாக, தங்களது கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் அயர்லாந்து கிரிக்கெட் சங்கத் தலைமை நிர்வாக அதிகாரி வாரன் டியூட்ரம்.

"வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பால் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்துள்ளோம். இது ஆயிரக்கணக்கான அயர் லாந்து விளையாட்டாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், தொண் டூழியர்கள் உள்ளிட்டோர் கிரிக் கெட் மீது கொண்டுள்ள பேரார் வத்துக்கு மிகச் சிறந்த சான்று," என்றார் அவர். இதன்மூலம் டெஸ்ட் போட்டி களில் விளையாடத் தகுதி பெற் றுள்ள நாடுகளின் எண்ணிக்கை பத்தில் இருந்து பன்னிரண்டாக உயர்ந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!