அமைச்சர் வோங்: பிரதமருக்கு பதவி அடிப்படையில் உரிமை

அமரர் லீ குவான் இயூவின் உடமைகள் தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அவருடைய அதிகாரபூர்வ பதவி அடிப்படையில் உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் பொருட்கள் பற்றிய பொது கண்காட்சியும் அந் தக் கண்காட்சிக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்கள் குறித் தும் லீ குவான் இயூவின் புதல்வர் களுக்கு இடையே சச்சரவு மூண்டிருக்கிறது.

அந்த அன்பளிப்பு உரிமையை தன்னுடைய அதிகாரத்தைத் தவ றாகப் பயன்படுத்தி தேசிய மரபு டைமைக் கழகத்திடமிருந்து பிர தமர் லீ சியன் லூங் நேரடியாக பெற்றி ருக்கிறார் என்று அவர் உடன்பிறப்புகள் கூறுகிறார்கள். சிங்கப்பூரை நிறுவிய தலை வர்களைப் பற்றிய பெரிய அளவி லான பொதுக் கண்காட்சிகள் அரசின் விவாதிப்புக்கு உரிய ஒரு விவகாரம் என்றும் ஆகையால் அந்தக் கண்காட்சியில் இடம்பெற் றுள்ள அம்சங்கள் குறித்தும் அந் தக் கண்காட்சி நடப்பது குறித்தும் பிரதமர் லீ சியன் லூங்கிடம் தகவல்களைத் தெரியப்படுத்துவது வழக்கமான, முறையான ஒன்று தான் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் வோங் நேற்று ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விவகாரம் பற்றி நாடா ளுமன்றத்தில் ஜூலை 3ஆம் தேதி பேச நான் திட்டமிட்டு இருக் கிறேன்,” என அமைச்சர் குறிப்பிட் டார். “தனிப்பட்ட முறையில் திரு லீ சியன் லூங் தகவல்களைக் கேட்டி ருக்கும் பட்சத்தில் காலமான லீ குவான் இயூவின் மூத்த மகன் என்ற முறையிலும் அவருடைய சொத்துக்கு வாரிசு என்ற முறை யிலும் கண்காட்சியைப் பற்றியும் லீ குவான் இயூவின் உடமைப் பொருட்கள் பற்றியும் தெரிந்து கொள்ள அவருக்கு உரிமை இருந்திருக்கும்.