‘ஆக்ஸ்லி ரோடு வீடு இடிப்பு நிகழாமல் போகலாம்’

எண் 38 ஆக்ஸ்லி ரோடு முகவரி யில் உள்ள முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் இயூவின் வீடு இடிபடாமல் அப்படியே இருக்கக் கூடும் என்பதையே அவருடைய கடைசி உயில் ஏற்றுக்கொள்வது டன் அங்கீகரிக்கிறது என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச் சர் இந்திராணி ராஜா கருத்து தெரி வித்தார். அந்த உயிலில் எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை இடிப்பதன் தொடர்பிலான ஒரு ஷரத்து இருக் கிறது. அந்த வீட்டை இடிப்பது மட்டுமே ஒரே வழி என்று அந்த ஷரத்து தெரிவிக்கவில்லை என் பதை நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பிரதமர் லீ சியன் லூங் அவ ருடைய தம்பியான லீ சியன் யாங், சகோதரியான டாக்டர் லீ வெய் லிங் ஆகிய மூவருக்கும் இடையில் அந்த வீட்டை இடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதன் தொடர்பில் கருத்து வேறுபாடு இருந்து வரு கிறது. கடைசி உயிலில் இடம்பெற்று உள்ள வீடு இடிப்பு ஷரத்தில் இரண்டு பகுதிகள் இருப்பதாக குமாரி இந்திராணி ராஜா குறிப்பிட் டார்.

முதலாவது பகுதி, அந்த வீட்டை இடித்துவிடுவது என்ற திரு லீ குவான் இயூ, திருமதி லீ குவான் இயூ ஆகிய இருவரின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் பல்வேறு கார ணங்களுக்காக அந்த வீடு இடிக் கப்படாமலேயே இருக்கக்கூடும் என்பதை இரண்டாவது பகுதி அங்கீகரிக்கிறது என்று குமாரி இந்திராணி ராஜா தெரிவித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!