முரண்டு பிடிக்கும் மும்பை அழகி

தனு‌ஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மும்பை அழகியான கஜோல். இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு ‘மின்சார கனவு’ என்ற படத்தில் பிரபு தேவாவுடன் நடித்திருந்தார். கஜோல் இந்தி படங்களில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தாலும் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். கணவர், குழந்தை என முழு கவனத்தையும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். இவர் வற்புறுத்தலின் காரணமாக தற்பொழுது தனுஷ்‌ஷின் ‘விஐபி 2’ படத்தில் வில்லியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் முதலில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியிடு வதாக இருந்தது.

அதற்கு ஏற்றவாறு அவர் சம்பளம் வாங்கி இருந்தார். தற்பொழுது கஜோலின் இந்தி மார்க்கெட்டை கருதியும் ஏற்கெனவே தனுஷ் இந்தியில் நடித்திருப்பதை கருத்தில் கொண்டும் இப்படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். முன்னதாக இந்தியில் இந்தப்படத்தை வெளியீடு செய்வது பற்றி எதுவும் தனக்குத் தெரியப்படுத்தாததால் கஜோல் அதிர்ச்சி அடைந்திருக்கிறரார்.

 

காரணம் நல்ல நடிகை என்ற பெயருடன் வலம் வரும் தன்னுடைய பெயர் இப்படத்தின் மூலம் வில்லத்தனமாக மாறி விடும் என்ற பயம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்திற்குப் பிறகு இந்தியில் அவரை வில்லத்தனமான கதாபாத்திரங் களுக்கு ஒப்பந்தம் செய்ய அழைப்பார்கள் என்னும் கவலையில் இருக்கிறார். மேலும் இந்தியில் குரல் பதிவு செய்யவேண்டும் என்றால் அதற்கு தனியாக சம்பளம் கொடுக்கவேண்டும் என்றும் அடம் பிடிக்கிறாராம். இந்தப் படத்தைச் சௌந்தர்யா இயக்குகிறார். அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. ஜூலை மாதம் தனுஷ் பிறந்த தினத்தன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.